×

ஏட்டு கன்னத்தில் பளார் அதிமுக பிரமுகர் கைது

சென்னை: மணலி காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவர், அயனாவரம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு அயனாவரம் காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது, இரவு 11 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பிஇ வடக்கு மாட வீதியில் சண்டை நடப்பதாகவும், உடனே அங்கு செல்லும்படி தகவல் வந்தது. இதனையடுத்து, தலைமை காவலர் பிரகாஷ் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, குடிபோதையில் தந்தை, மகன் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது, தலைமை காவலர் பிரகாஷ் ஏன் சண்டை போடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு, அவர்கள் எங்களது பிரச்னையை விசாரிக்க நீ யார் எங்கள் வரிப்பணத்தில் நீ சம்பளம் வாங்குகிறாய், மேலும் நான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் என்று கூறி அநாகரிகமான வார்த்தைகளால் பேசி பிரகாஷை ஓங்கி அடித்துள்ளார். இதில், அவருக்கு இடது பக்க முகத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த, அயனாவரம் போலீசார் நேற்று தேவராஜ் (39). என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் தேவராஜ் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் இடையே பிரச்னை ஏற்பட்டதும். இதில், தேவராஜ் தலைமை காவலரின் கன்னத்தில் அடித்ததும் தெரியவந்தது. மேலும், போலீசார், தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Palar ,AIADMK ,Ettu Khanna , Palar AIADMK leader arrested at Ettu Khanna
× RELATED பெண் எஸ்ஐக்கு ‘பளார்’ பைனான்ஸ் ஊழியர் கைது