×

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு சென்னையில் 38.82 லட்சம் வாக்காளர்கள்: கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று  ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் உள்ளன. கடந்த நவம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மூலம் சென்னையில் 54,347 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் 64,527 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 831 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 125 வாக்காளர்களும் உள்ளனர். ஒட்டு மொத்தமாக சென்னையில் 19 லட்சத்து 9 ஆயிரத்து 512 ஆண் வாக்காளர்களும், 19 லட்சத்து 71 ஆயிரத்து 653 பெண் வாக்காளர்களும், 1,112 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 38 லட்சத்து 82 ஆயிரத்து 277 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த நவம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், மொத்தம் 10 ஆயிரத்து 180 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.

* ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 69ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்து 316 குறைந்து, 2 லட்சத்து 39 ஆயிரத்து 753ஆக உள்ளது.
* பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 359ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்து 484 குறைந்து, 2 லட்சத்து 79 ஆயிரத்து 875ஆக உள்ளது.
* கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 584ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரத்து 614 அதிகரித்து, 2 லட்சத்து 77 ஆயிரத்து 198ஆக உள்ளது.
* வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 478ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 516 அதிகரித்து, 2 லட்சத்து 39 ஆயிரத்து 994ஆக உள்ளது.
* திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 352ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 967 அதிகரித்து, 2 லட்சத்து 12 ஆயிரத்து 319ஆக உள்ளது.
* எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 710ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 126 அதிகரித்து, 1 லட்சத்து 90 ஆயிரத்து 836ஆக உள்ளது.
* ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 639ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 43 அதிகரித்து, 1 லட்சத்து 89 ஆயிரத்து 682ஆக உள்ளது.
* துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 211ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 86 குறைந்து, 1 லட்சத்து 70 ஆயிரத்து 125ஆக உள்ளது.
* சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 574ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 83 அதிகரித்து, 2 லட்சத்து 30 ஆயிரத்து 657ஆக உள்ளது.
* ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 450ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 29 அதிகரித்து, 2 லட்சத்து 33 ஆயிரத்து 479ஆக உள்ளது.
* அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 100ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 461 அதிகரித்து, 2 லட்சத்து 73 ஆயிரத்து 561ஆக உள்ளது.
* விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 516ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 561 குறைந்து, 2 லட்சத்து 76 ஆயிரத்து 955ஆக உள்ளது.
* சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 421ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 320 அதிகரித்து, 2 லட்சத்து 67 ஆயிரத்து 741ஆக உள்ளது.
* தி.நகர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 353ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 659 குறைந்து, 2 லட்சத்து 30 ஆயிரத்து 694ஆக உள்ளது.
* மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 647ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 930 அதிகரித்து, 2 லட்சத்து 61 ஆயிரத்து 577ஆக உள்ளது.
* வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 994ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 838 அதிகரித்து, 3 லட்சத்து 7 ஆயிரத்து 831ஆக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  (தேர்தல்கள்) குலாம் ஜிலானி பாபா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி  பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளர்கள்
தொகுதி    ஆண்கள்    பெண்கள்    இதரர்    மொத்தம்
ஆர்.கே.நகர்    1,15,556    1,24,096    101    2,39,753
பெரம்பூர்    1,37,693    1,42,108    74    2,79,875
கொளத்தூர்    1,35,524    1,41,602    72    2,77,198
வில்லிவாக்கம்    1,17,758    1,22,175    61    2,39,994
திரு.வி.க.நகர் (தனி)    1,03,138    1,09,129    52    2,12,319
எழும்பூர் (தனி)    94,640    96,141    55    1,90,836
ராயபுரம்    92,833    96,789    60    1,89,682
துறைமுகம்    88,396    81,670    59    1,70,125
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி    1,13,338    1,17,271    48    2,30,657
ஆயிரம் விளக்கு    1,14,219    1,19,161    99    2,33,479
அண்ணாநகர்    1,34,137    1,39,337    87    2,73,561
விருகம்பாக்கம்    1,37,845    1,39,019    91    2,76,955
சைதாப்பேட்டை    1,31,509    1,36,145    87    2,67,741
தி.நகர்    1,13,908    1,16,740    46    2,30,694
மயிலாப்பூர்    1,26,873    1,34,667    37    2,61,577
வேளச்சேரி    1,52,145    1,55,603    83    3,07,831
மொத்தம்    19,09,512    19,71,653    1,112    38,82,277

*வயது வாரியாக வாக்காளர் விவரம்
மாவட்டம்    18-19    20-29    30-39    40-49    50-59    60-69    70-79    80 பிளஸ்    மொத்தம்
சென்னை    32579    611827    827057    892965    689076    450345    252934    125494    38,82,277
திருவள்ளூர்    40747    628826    754747    792976    590342    366824    182992    64077    34,21,531
காஞ்சிபுரம்    18437    248669    297691    313932    218048    138576    73243    30058    13,38,654
செங்கல்பட்டு    26974    464334    641266    617228    428753    280170    145998    56793    26,61,516

* இணையத்தில் பார்க்கலாம்
சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளர்  அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு  வைக்கப்பட்டுள்ளன. மேலும், http://www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்க்கலாம்.

* சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக  வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 831 வாக்காளர்களும்,  குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 125  வாக்காளர்களும் உள்ளனர்.
* சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மூலம்  சென்னையில் 54,347 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  64,527 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chennai , 38.82 lakh voters in Chennai to release final voter list: Additional District Election Officer information
× RELATED சென்னை வளசவரவாக்கத்தில் உள்ள போதை...