சென்னை: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு வருகிற 19ம் தேதி நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் துறையில் அடங்கிய உதவி இயக்குனர்(பெண்கள் மட்டும்) பதவியில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு கடந்த 5.11.2022 அன்று கணினி வழித் தேர்வு நடைபெற்றது.