மாஜி முதல்வர் சந்திரபாபு போலீசாருடன் வாக்குவாதம்

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு ‘இதி ஏமி கர்மா’ என்ற மாநிலம் முழுவதும் ஜெகன் அரசை கண்டித்து பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ நடத்தி வந்தார். இதேபோல் கடந்த வாரம் நெல்லூர் மாவட்டம் கந்துகூரில் நடந்த உதவிகள் வழங்கும் விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் இறந்தனர். அதேபோல் கடந்த 31ம்தேதி குண்டூரில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் இறந்தனர். இதற்கு முதல்வர் ஜெகன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ நடத்த தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான குப்பத்தில் நேற்று மாலை சந்திரபாபு ரோடுஷோ நடத்த வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி ரோடுஷோ நடத்தக்கூடாது என தெரிவித்தனர். இதனால் கடும் ஆவேசம் அடைந்த சந்திரபாபு, ‘எந்த பிரிவின் கீழ் கூட்டம் நடத்தக்கூடாது? என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் மட்டுமே கூட்டத்தை ரத்து செய்வேன்’ எனக்கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: