×

உத்தரகாண்டில் 4 ஆயிரம் குடியிருப்புகளை இடித்து தள்ளுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. உத்தராகண்ட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மூன்றாவது பெரிய மாநகரம் ஹால்ட்வானி. இங்கு ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்திருப்பதாக நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கில் கடந்த மாதம் 20-ம் தேதி உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமத்திருக்கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு அங்கு வசிக்கும் மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆக்கரிக்கப்பட்ட இடம் என கூறப்படும் பகுதியில் 4 ஆயிரம் வீடுகள், 4 அரசு பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், ஒரு வங்கி, 10 மசூதிகள், 4 கோயில்கள் உள்ளிட்டவை உள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, இம்மாதம் 9ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஊர்வலங்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றில் ஹால்ட்வானி பகுதி மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஹால்ட்வானி மக்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. ரே இரவில் 50 ஆயிரம் மக்களை வெளியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உத்தரகாண்டில் 4 ஆயிரம் குடியிருப்புகளை இடித்து தள்ளுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதித்தது.

Tags : Supreme Court ,Uttarakhand , The Supreme Court stayed the order issued to demolish 4,000 houses in Uttarakhand
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...