போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை மாநகர காவல்துறையில் 15 புதுமையான திட்டங்கள் அறிமுகம்..!

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சென்ைன மாநகர காவல்துறை சார்பில் 15 புதுமையான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அண்ணாநகரில் மட்டும் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழக காவல் துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் பல்வேறு புதுத்திட்டங்கள் அறிமுகம் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், மாநகர போக்குவரத்து காவல்துறையில் 15 புதுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:

* அண்ணாநகரில் முக்கிய 5 சந்திப்புகளில் நிறுவப்பட்ட தானேங்கி கேமரா மூலம் வழக்கு பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து நிதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது ஒரு நாளைக்கு 7 ஆயிரம் சலான்களை தானாக உருவாக்கிறது.

* தமிழக முதல்வர் அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர், ஈகா சந்திப்பு, மின்ட் சந்திப்புகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யும் வகையில் ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

* போக்குவரத்து விதி மீறல்களை பதிவு செய்ய 11 சந்திப்புகளில் 15 ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட்டு ஐடிஆர்எஸ் அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனுமதியில்லாத வழியில் செல்பவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டுபவர்கள், பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் வாககம் ஓட்டுபவர்களையும், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்பவர்களையும் கண்டறிந்து தானாகவே இ-சலான் உருவாக்குகிறது.

* வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள இ- சலான்கள் பற்றி தகவல்களை பெற 12 கால் சென்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது.

* கூகுள் கண்காணிப்பு அமைப்பு மூலம் போக்குவரத்தின் நேரலை நிலையை அறிந்து, அதனை கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. தானியங்கி கூகுள் எச்சரிக்கை முறைப்படுத்தப்பட உள்ளது. * வாகன ஓட்டிகளுக்கு ெதளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்இடி கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.

* மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் லெப்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘ரோடு ஈஸ்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அறிமுகம் செய்யப்பட்ட ஆப் மூலம் மூடிய சாலையை சிவப்பு கோட்டால் சுட்டிக்காட்டப்பட்டு மூடிய சாலையை கூகுள் வரைப்படத்தில் பதிவு செய்து தகவலை உடனுக்குடன் அப்போதைய நிலையை தெரிவிக்கிறது.

* 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்கள் மாற்று பணி நடைபெற்று வருகிறது.

* பொதுமக்களுக்கு அதிக காவலர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக 186 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன.

* போக்குவரத்து விதிகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்யும் வகையில் 104 சந்திப்புகளில் ஒலிபெருக்கி மற்றும் பாடல்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

* சமூக ஊடகம் மற்றும் சிடிசன் அப் பயன்பாடு இப்போது மிகவும் நல்ல நிலையில் உள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் சிடிசன் ஆப் மூலம் பொதுமக்கள்  அளிக்கும் ஆலோசனைகள் மற்றும் புகார்களை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்திகளை காட்சிப்படுத்தும் வகையில் 25 முக்கிய சந்திப்புகளில் விஎம்எஸ் திரைகள் நிறுவப்பட்டுள்ளன.

* இ-பீட் செயலியின் மூலம் போக்குவரத்து காவலர்கள் அவர்கள் ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் பணியில் இருப்பதை உறுதி செய்யப்படுகிறது.

* 47 போக்குவரத்து ரோந்து வாகனங்கள் மூலம் விபத்து அழைப்புகள், 103 அழைப்புகள், சமூக ஊடக அழைப்புகள் வரும் இடங்களுக்கு விரைந்து சென்றும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளிலும் ரோந்து வாகனங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

* அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விபத்துக்கள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து நெடுஞ்சாலைதுறையினர், மாநகராட்சி அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அடங்கிய குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய பணிகள் பற்றியும், சாலைகளை மேம்படுத்தவும், மேலும் செய்ய வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு:

* கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் 100 முக்கிய சந்திப்புகளில் ஒலி மாசுவால் ஏற்படும் தீமைகள் குறித்து  பிரசாரம் நடத்தப்பட்டது.

* சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

* பள்ளி மாணவர்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்த ‘சூப்பர் குட்டி, காப்-கார்டு என்ற  புதிய திட்டம் தொடங்கப்பட்ட சுமார் 1 லட்சம் ‘சூப்பர் குட்டி’ அட்டைகள் வழங்கப்பட்டது.சென்னையில் செய்யப்பட்ட மேம்பாட்டு பணிகள்:

* தாராபூர் டிவர் அருகே ஒரு வழி பாதை.

* ஸ்மித் பட்டுலால் சாலையில் ஒரு வழித்திருப்பம்.

* திரு.வி.க.சாலையில் ஒரு வழிபாதை.

* நந்தனம் ‘யு’திருப்பம் மற்றும் ஓப்பனீங் ப்ரிலெப்ட்.

* காசி தியேட்டர் அருகே ‘யு’ திருப்பம்.

* 100 அடி சாலையில் 3 கடக்கும் சாலையை மூடப்பட்டு 2 ‘யு’ திருப்பங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. * சிபிடி சந்திப்பில் வலதுபுற திருப்பம் தடை செய்யப்பட்டுள்ளது.

* மாலையில் ஹாரிங்டன் சாலையில் வலதுபுறம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * காலையில் தாஸ் பிரகாஷ் சாலையில் வலதுபுறம் திரும்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: