×

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்; நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் ஜனவரி 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில்வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 6ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பிருக்கிறது.

சென்னையில் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 7ம் தேதி வரை மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Tags : Tamil Nadu ,Nilgiris ,Chennai Meteorological Department , Tamil Nadu, moderate rain, Nilgiri, frost, Meteorological Center
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால்...