×

நல்லாசிரியர் விருது பெற்று நாகை ஆசிரியரின் மனிதாபிமானம்: பணியாற்றும் பள்ளிக்கு ரூ.3 லட்சம் செலவில் வசதிகள்

நாகப்பட்டினம்: நாகையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் தான் பணியாற்றும் பள்ளிக்கு டிஜிட்டல் உலகம், நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை ரூ.3 லட்சம் செலவில் ஏற்படுத்தி கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார். நாகை தேசிய மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராஜராஜன் தான் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வதை பழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மகிழ்ச்சியில் ரூ.3 லட்சம் செலவில் டிஜிட்டல் நூலகம், நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்து அவர் அசத்தியுள்ளார். திரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, ஆசிரியர்களுக்கான கற்றல், கற்பித்தல் வள அறை ஆகியனவும் செய்து கொடுத்துள்ளார். இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்று புதிய வசதிகளை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர் ராஜராஜனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.  



Tags : A good writer, an award winner, a teacher, a humanitarian
× RELATED இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்...