×

உயர்நீதிமன்ற நீதிபதி நியமன பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் நிராகரித்தது: ஒன்றிய அரசு தகவல்..!

டெல்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளில் 30% உச்சநீதிமன்ற கொலீஜியம் நிராகரித்து விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் இடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற கொலீஜியம் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு பெயர்களை பரிந்துரைக்கும். உச்சநீதிமன்றம் கொலீஜியம் அந்த பரிந்துரையை பரிசீலித்து ஒன்றிய அரசுக்கு பட்டியலை தரும்.

அந்த வகையில் 2021-ஆம் ஆண்டில் 251 பெயர்கள் உயர்நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதில் 2022-ல் மே மாதம் வரை 148 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருப்பது ஒன்றிய சட்ட அமைச்சகம் நாடாளுமன்ற நிலை குழுவிற்கு அளித்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. உயர்நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 74 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் ஏற்கவில்லை. சுமார் 30% பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் கொலீஜியம் நிராகரித்துள்ளது. எஞ்சிய 29 பேரின் நியமனங்கள் ஒன்றிய அரசால் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் அதில் தெரியவந்துள்ளது.  


Tags : Supreme Court Collegium , High Court, Judge, Supreme Court, Collegium, Union, Govt
× RELATED 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்: கொலீஜியம் பரிந்துரை