இலவச கண் மருத்துவ முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமை எம்எல்ஏ கே.பி.சங்கர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை திருவொற்றியூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாமை திருவொற்றியூர் மாநகராட்சி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இதில், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். முகாமை, கே.பி.சங்கர் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த, முகாமில் கண் பார்வை குறைபாடு, கண்புரை பரிசோதனை செய்யப்பட்டு தேவையானவர்களுக்கு கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த, முகாம் தொடர்ந்து திருவொற்றியூர் பகுதியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனை, திருவொற்றியூர் குப்பம், தாங்கல், எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு, கத்திவாக்கம் மற்றும் மணலி புதுநகர் போன்ற பகுதிகளில் (4ம்தேதி) நேற்று முதல் வரும் 9ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், எம்ஆர்எப் நிறுவன பொது மேலாளர் ஜேக்கப் சி.சாக்கோ, இந்தியா விஷன் மருத்துவர் ஹெமிமா, அரசு மருத்துவ அதிகாரிகள் மாலதி, சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: