கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க குழு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் வழிமுறைகள் உருவாக்க, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றேன். கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையினால் பல்வேறு சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் பயன்பெற்று மாணவ மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருக்க வழிவகுக்கும். இந்த சீரிய நடவடிக்கையை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: