×

கோயம்பேட்டில் வெங்காயம் விலை சரிவு

சென்னை: வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பால், கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை சரிவு ஏற்பட்டு விற்பனை நடந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. இதில், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் நேற்றும் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லதரிசிகள் மற்றும் சென்னை புறநகர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Coimbatore , Onion prices fall in Coimbatore
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...