×

 ஜெயக்குமாருக்கு கருத்து சொல்ல முடியாது எடப்பாடிக்குதான் பதில் சொல்வேன்: அன்புமணி அதிரடி

மதுரை: ‘எடப்பாடிக்கு மட்டும்தான் பதில் சொல்வேன்’ என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனை நடத்தவும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் நேற்று மதுரை வந்தார். தெப்பக்குளத்தில் அக்கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின்போது, நிர்வாகி ஒருவர், அதிமுகவை தாக்கி பேச முயன்றார். அப்போது அவரை இடைமறித்த அன்புமணி ராமதாஸ், ‘‘நம்மை பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதனால்தான் அதிகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்கள் வருவது நல்லது  தான். நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பாஜ ஆட்சி நடக்கின்ற மாநிலங்களுக்கு மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப்பது ஏன் என்று புரியவில்லை. தமிழகத்தில் அவசர சட்டம் நிறைவேற்றிய பிறகு 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு தமிழக ஆளுநரே பொறுப்பு என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். 1989ல் துவங்கப்பட்ட பாமக இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. இது வருத்தமாக உள்ளது. தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னதாக கூட்டணி குறித்து அறிவிப்போம். ரஜினிகாந்த் சொன்னது போல், என் வழி தனி வழி என்று ஸ்டைலாக சொல்ல எனக்குத் தெரியாது. பாமக குறித்து ஜெயக்குமார் சொல்லும் கருத்துக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. எடப்பாடி சொன்னால் பதில் சொல்வேன். இவ்வாறு கூறினார். 


Tags : Jayakkumar ,Edapatik , I can't comment on Jayakumar, I will only reply to Edappadi: Anbumani Action
× RELATED பாஜகவின் சோதனை பூச்சாண்டிக்கெல்லாம்...