சொத்து வரி செலுத்தாத தனியார் பள்ளிக்கு சீல்: சீர்காழி நகராட்சி அதிரடி

சீர்காழி: சீர்காழியில் சொத்து வரி செலுத்தாத தனியார் பள்ளியை நகராட்சி நிர்வாகம் நேற்று சீல் வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரில் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி நிர்வாகம், கடந்த 2017 முதல் 2023 வரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.5,502 செலுத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம், சொத்துவரி செலுத்த தவறினால் பள்ளிக்கு சீல் வைக்க நேரிடும் என பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் தகவல் தெரிவித்தது. ஆனாலும் பள்ளி நிர்வாகம், வரியை செலுத்தாமல் அலட்சியமாக இருந்து வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் வாசுதேவன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று மாலை தனியார் பள்ளிக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.  

Related Stories: