திருக்கோவிலூர் அருகே விளைநிலத்தில் கிடந்த ஐம்பொன் சாமி சிலைகள்

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்  பார்த்தசாரதி. இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விளைநிலத்தில் கரும்பு வெட்டும் பணி நேற்று காலை நடந்தது. அப்போது நிலத்தில் இருந்த சாக்குபையை தொழிலாளர்கள் மீட்டனர். அதை திறந்து பார்த்தபோது ஐம்பொன்னாலான ஒரு அடி உயர லிங்கம் மற்றும் அரை அடி நந்தி சிலை இருந்தது. தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் சரவணன், திருப்பாலப்பந்தல் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தாசில்தார் சரவணன் சுவாமி சிலைகளை மீட்டு கருவூலகத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: