×

பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 பயனாளிகளுக்கு நேரடியாக மட்டுமே வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 பயனாளிகளுக்கு நேரடியாக மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அனைத்து நியாய விலைக்கடைகளும் வரும் 2  ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் எனவும் தமிழகத்தில் 4,455 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு ரூ.1000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 பயனாளிகளுக்கு நேரடியாக மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தார். அனைத்து நியாய விலைக்கடைகளும் வரும் 2  ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் எனவும் தமிழகத்தில் 4,455 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். மேலும் கரும்புகள் வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags : Minister ,Periyakaruppan , Pongal prize money of Rs 1,000 will be given directly to beneficiaries only: Minister Periyakaruppan informs
× RELATED முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை