அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஆய்வு கூட்டம்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று (04.01.2023)  தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சட்டபேரவையில் அறிவித்த அறிவிப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்களின் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம், தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றில்  செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம்  குறித்த ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் அரசாணைகள் வெளியிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அரசாணை வெளியிடுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விரிவான திட்ட அறிக்கைகளை தயார் செய்து நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கடந்த 20 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் அனைத்து திட்ட பணிகளையும் நிறைவு செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

Related Stories: