கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் உடல்நிலையை தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படும்

மும்பை: டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்க்கு மும்பைக்கு மாற்றப்பட்டவுடன் தசைநார் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. ரிஷப் பந்த் உடல்நிலையை தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 30 அன்று அதிகாலை ரூர்க்கியில் இருந்து புது டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது பந்த் சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் ரிஷப் பந்த்தின் தலை, முதுகு மற்றும் பாதங்களில் காயம் ஏற்பட்டது. அவரது நெற்றியில் இரண்டு வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்தது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் ஏற்பட்டது.

பந்த் முதலில் டெல்லிக்கு அருகிலுள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரது உடல்நிலை சீரான பிறகு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் ரிஷப் பந்த்க்கு மும்பைக்கு மாற்றப்பட்டவுடன் தசைநார் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.  

மேலும் ரிஷப்பின் மீட்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு வாரியம் எல்லா முயற்சிகளையும் எடுக்கும் எனவும் இந்த காலகட்டத்தில் அவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related Stories: