கப்பலூர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

டெல்லி: கப்பலூர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்சியை சந்தித்து வலியுறுத்திய பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார். 2 சுங்கச்சாவடிகளுக்கும் விரைவில் மாற்றுவழி ஏற்படுத்தப்படும் என நிதின் கட்கரி உறுதி அளித்தார் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழு விரைவில் ஆய்வு செய்யும் என நிதி கட்கரி கூறியுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: