
சென்னை: விதிகளை மீறியதாக பிரபல நடிகர் கிஷோர் குமாரின் டிவிட்டர் கணக்கு திடீரென முடக்க பட்டுள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் கிஷோர் குமார். இவர் தமிழில் வெண்ணிலா கபடிகுழு, ஆடுகளம் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது காந்தாரா திரைப்படத்திலும் வனத்துறை அதிகாரி வேடத்தில் கிஷோர் குமார் நடித்திருந்தார்.
இவர் சமூக பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் டிவிட்டர் விதிகளை மீறியதாக கூறி கிஷோர் குமாரின் டிவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. அந்த டிவிட்டர் கணக்கு எப்போது முடக்கப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாக வில்லை.