×

பொங்கல் திருநாளை முன்னிட்டு குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை 4 மணி நேரம் நீட்டிப்பு

குமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு 15 முதல் 17ம் தேதி வரை 3 நாட்களும் கூடுதலாக 4 மணி நேரம் படகு சேவை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ரசாயன பூச்சு பணியானது முடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை தொடங்க உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளூர் சிலைக்கான படகு சேவை 4 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஜன-15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 3 நாட்களும் கூடுதலாக 4 மணி நேரம் படகு சேவை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Vivekanandar hall ,Kumari ,Pongal Tirirana ,Thiruvalluvar , Boat service extended by 4 hours to Vivekananda Mandapam, Thiruvalluvar idol in Kumari ahead of Pongal festival
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...