×

சவாலான சூழ்நிலைகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்: கேப்டன் ஹர்திக் பாண்டியா

மும்பை: சவாலான சூழ்நிலைகளை இந்த அணி எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். பெரிய ஆட்டங்களில் அது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். மேலும் இந்தியா வலுவாக உள்ள இருதரப்பு ஆட்டங்களில், முடிந்தவரை சவால்களை எதிர்கொண்டால் வீரர்களுக்கு நன்மை என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்கதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்க ஆட்ட காரரான சுப்மன் கில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடக்க ஆட்ட காரர் இஷான் கிஷான் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் 5 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா 29 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவருடன் கைகோர்த்த அக்சர் படேல் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

163 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சிவம் மாவி 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். உம்றான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா; சவாலான சூழ்நிலைகளை இந்த அணி எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் எனவும் பெரிய ஆட்டங்களில் அது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறினார்.

மேலும் இறுதி ஓவரை வீசிய அக்சர் படேல் குறித்து குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா,    
13 ரன்கள் இலக்கு என்ற நிலையில், 11 ரன்கள் மட்டும் கொடுத்தார் அக்சர் படேல் எனவும் பெரிய ஆட்டங்களில் அது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறினார்.

Tags : Indian ,Hardik Pandya , I want this team to face challenging situations: Captain Hardik Pandya
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...