பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக் கொலை

சண்டிகர்: பஞ்சாபில் சர்வதேச எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த நபர் எல்லைப்பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில், எல்லைப்பாதுகாப்பு படையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். குருதாஸ்பூரின் அஜ்னலா செக்டாரில் காலை 8 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பிராந்தியத்திற்குள் மர்ம நபர் ஊடுருவ முயற்சிப்பதை வீரர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து அவரை திரும்பி செல்லும்படி வீரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அவர் இதனை பொருட்படுத்தாமல் முன்னேறி வந்ததால் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு அந்த நபரை கொன்றனர். கொல்லப்பட்ட நபர் அருகில் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. 2023ம் ஆண்டு எல்லையில் முதல் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எல்லையில் ஊடுருவிய 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர், 23 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: