×

அண்ணன்களுக்குள் கோஷ்டி மோதல் அதிமுக மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத் மீது வழக்குப்பதிவு: கடலூர் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல்

கடலூர்: பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அண்ணன்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத். இவரது சகோதரர்கள் தங்கமணி (65), ராமசந்திரன் (77). இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதில், தங்கமணி, ராமசந்திரன், அவரது மனைவி ஜோதி (65) மற்றும் ராஜேந்திரன் (63), பழனி(50) ஆகிய 5 பேர் காயம் அடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக ராமசந்திரன் பண்ருட்டி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தூண்டுதலின்பேரில் தாக்குதல் நடந்ததாக புகார் செய்தார். இதையடுத்து போலீசார் தங்கமணி, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், ராஜேந்திரன், பழனியப்பன் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதனை கண்டித்து கடலூர் லாரன்ஸ் சாலை அண்ணா மேம்பாலம் சந்திப்பில் அதிமுகவினர் 200 பேர் நேற்று மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

Tags : ADMK ,minister ,M.C.Sambath ,Cuddalore , Party conflict between brothers, AIADMK ex-minister, prosecution,
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...