×

விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15 கோடியில் ஓடுதளம், ஜிம்னாஷியம் திடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை வளாகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.15 கோடியில் ஓடுதளம், ஜிம்னாஷியம் திடலை முதல்வர் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 400 மீ. செயற்கையிழை ஓடுதளம், ரூ.5 கோடியே 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம் திடல் மற்றும் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் ரூ.15 கோடியே 60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, துறையின் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Sports University Campus Thital ,Chief Minister ,M. K. Stalin , Sports Univ., Running Ground, Gymnasium Thital, Principal M.K.Stalin
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...