டெல்லி - தாய்லாந்து விமானத்தில் கோளாறு: மீண்டும் தரையிறங்கியதால் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் இருந்து தாய்லாந்து நாட்டின் ஃபுகெட் நகருக்கு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் டெல்லி திரும்பியது. தொழில்நுட்பக் காரணமாக அந்த விமானம் டெல்லி திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் ‘ஹைட்ராலிக்’ தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

அதனால் விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. ஃபுகெட் செல்லும் பயணிகளுக்கான மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: