வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்

திருவள்ளூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  பெருமாளுக்கு கருட சேவை உற்சவம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மூலவர் விசேஷ அலங்கார சேவையும் தனுர்மாத திருவாராதனம் மூலவர் தரிசனமும் நடைபெற்றது.

நேற்று மாலை உற்சவர் கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. அப்போது சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இன்று 3ம் தேதி அதிகாலை உற்சவர் துவாதசி சயனத் திருக்கோலம் மற்றும் தனுர்மாத திருவாராதன தரிசனம் நடைபெற்றது. இதற்கான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் டி.ஆர்.பிரகாஷ் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.

Related Stories: