ஒருபோதும் அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது: பிரியங்கா காந்தி பேச்சு

டெல்லி : அம்பானி அதானியால் ராகுல் காந்தியை வாங்க முடியவில்லை. இனி  வாங்கவும் முடியாது என பிரியங்கா காந்தி  பேசியுள்ளார். புத்தாண்டு விடுமுறையை முடிந்து மீண்டும் தனது ஒற்றுமை யாத்திரையை டெல்லியில் உள்ள மார்கத் அனுமன் கோயில் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தொடங்கினார். அவருக்கு தொண்டர்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இன்று அவர் டெல்லியை தொடர்ந்து உத்திர பிரதேசத்திற்குள் நுழைந்தார்.

அவரை காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொது செயலாளர் பிரியங்கா காந்தி வரவேற்றார். அந்த நிகழ்வில் பேசிய பிரியங்கா காந்தி, அம்பானி அதானியால் ராகுல் காந்தியை வாங்க முடியவில்லை. இனி  வாங்கவும் முடியாது என்று பிரியங்கா காந்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில், ராகுல் காந்தி உண்மை எனும் கவசத்தை எப்போதும் அணிந்து இருப்பதால் அவரை குளிர் ஒன்றும் செய்வதில்லை என்றும் அந்த நிகழ்வில் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Related Stories: