×

தமிழகத்தின் 72 திமுக மாவட்டங்களில் திமுக இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் 72 திமுக மாவட்டங்களில் இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்களை நியமனம் செய்து உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக இளைஞர் அணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில், தமிழகத்தின் 72 திமுக மாவட்டங்கள், பாண்டிச்சேரி-காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் இளைஞர் அணி துணை செயலாளர் ஒருவர், மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அதன்படி, 9 மண்டலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள்: சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு மற்றும் அந்தமான், மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களை உள்ளடக்கிய மண்டலம்-1ன்  பொறுப்பாளராக எஸ்.ஜோயல்  நியமிக்கப்படுகிறார். திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மண்டலம்-2ன் பொறுப்பாளராக ப.அப்துல் மாலிக்  நியமிக்கப்படுகிறார். மண்டலம்-3ன் பொறுப்பாளராக க.பிரபு நியமிக்கப்படுகிறார். இந்த மண்டலத்தில் காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, வேலூர் மத்திய, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, பாண்டிச்சேரி பகுதிகள் உள்ளன. மண்டலம்-4ன் பொறுப்பாளராக பி.எஸ்.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய பகுதிகள் உள்ளன. நீலகிரி, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கரூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய பகுதிகளை கொண்ட மண்டலம்-5ன் பொறுப்பாளராக  கே.இ.பிரகாஷ்  நியமிக்கப்படுகிறார். மண்டலம்-6ல் சி.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி, மத்திய, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, திருவாரூர் ஆகிய பகுதிகள் உள்ளன. மண்டலம்-7ல் நா.இளையராஜா  நியமிக்கப்பட்டுள்ளார். இதில் தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாலூர் மத்திய, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் வடக்கு, நாகப்பட்டினம் தெற்கு, காரைக்கால் ஆகிய பகுதிகள் உள்ளன.

மண்டலம்-8ல் கு.பி.ராஜா (எ) பிரதீப் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மண்டலத்தில் விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன. மண்டலம்-9ல் ந.ரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மண்டலம் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, நெல்லை கிழக்கு, நெல்லை மத்திய, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Tamil Nadu ,Udayanidhi Stal , Appointment of DMK youth team zonal in-charges in 72 DMK districts of Tamil Nadu: Udayanidhi Stal announced
× RELATED பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு...