×

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட 2 சிறுவர்களுக்கு ஈரான் மரண தண்டனை விதிப்பு

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு சிறுவர்களுக்கு ஈரான் மரண தண்டனை விதித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடவுளுக்கு எதிரான போர் என்ற குற்றச்சாட்டில் பெயர்கள் குறிப்பிடப்படாத 18 வயதை பூர்த்தியடையாத சிறுவர்கள் இருவருக்கு விசாரணையின் முடிவில் ஈரான் அரசு தூக்குத் தண்டனை விதித்துள்ளதாக ஈரானின் நீதித்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, 23 வயதையுடைய இரண்டு இளைஞர்களுக்கு 2022-ஆம் ஆண்டின் இறுதியில் தூக்குத் தண்டனை ஈரான் நிறைவேற்றி இருந்தது. மேலும், ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 100 பேருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஈரான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதற்கிடையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைக்கு எதிராக போராட்டக்காரர்கள் சிலர் மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அவற்றில் சிலரின் மனுக்கள் எற்றுக் கொள்ளப்பட்டு மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு வருகின்றது.


Tags : Iran , Iran sentences 2 boys to death for participating in anti-hijab protests
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...