×

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 76 மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறினார். 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் பதவிக்கு 9915 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பிஎச்டி பட்டம் பெற்று, ஜெஆர்எஸ், நெட் தேர்வில் தேர்ச்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் 4000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேலும் 1895 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தற்காலிகமாக நிரப்பும் அறிவித்திருந்தனர்.

புதிதாக நியமனம் செய்யப்படும் கௌரவ விரிவுரையாளர்கள், அறிவிக்கப்பட்டுள்ள கல்வியாண்டிற்கு மட்டும் (11 மாதங்களுக்கு) தற்காலிக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், தொகுப்பூதியமாக மாதம் ஒன்றிற்கு ரூ.20,000 வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துளளது. பல்கலைக்கழக மானியக்குழு ஒழுங்குமுறைகள் 2018-ன்படி உரிய கல்வித் தகுதி பெற்றுள்ளவர்கள் மட்டுமே தகுதியுடையவராக கருதப்படுவர். 55% சதவீத மதிபெண்களுடன் முதுகலைப் பட்டம், NET/SLET/SET தேர்ச்சி அல்லது Ph.d தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கெளரவ விரிவுரையாளர் தேவைப்படும் பாடப்பிரிவுகள் மற்றும் மாவட்ட வாரியாக பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ஆங்கில பாடத்தில் அதிகப்படியாக 358 பணியிடங்கள் உள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழில் 317 பணியிடங்கள், வணிகத்தில் 150 பணியிடங்கள், இயற்பியலில் 122 பணியிடங்கள், கணினி அறிவியலில் 120 பணியிடங்கள், கணிதத்தில் 117 பணியிடங்கள் மற்றும் வேதியியலில் 103 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளது.


Tags : Tamil Nadu ,Minister ,Ponmudi , Appointment of 1,895 Honorary Lecturers in Vacant Government Arts Colleges in Tamil Nadu: Minister Ponmudi Interview
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...