×

ஒரு தவறுக்காக ஒதுக்குவது நியாயம் இல்லை; பிரித்விஷாவுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா! கம்பீர் சொல்கிறார்

மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் பிரித்விஷா. இவர் 2019ம் ஆண்டில், போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கிரிக்கெட் விளையாட 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2020-21ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட பிரித்விஷா சிலமுறை டக்அவுட் ஆனதால், போதைப் பொருள் பயன்படுத்தியவரை ஏன் மீண்டும் சேர்த்தீர்கள் என கண்டனங்கள் குவிந்தது. அதன்பிறகு பிரித்விஷாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. இடையில், 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஒரு போட்டியில் விளையாடினார்.

இருப்பினும், பிரித்விஷா உள்ளூர் தொடர்களில் அபாரமாக விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். சமீபத்தில் முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் 181.42 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 336 ரன்களை குவித்து அசத்தினார். அதன்பிறகும், பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. துகுறித்து இந்திய அணியின் மாஜி வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டி: ந்திய அணியில் பயிற்சியாளர்கள் எதற்காக இருக்கிறார்கள்? தேர்வாளர்கள் எதற்காக இருக்கிறார்கள்? அணியை தேர்வு செய்வதற்கும், தேவையில்லாதவர்களை நீக்குவது மட்டும் இவர்களது வேலை கிடையாது. பிரித்வி ஷா போன்ற திறமையான வீரர்களுக்கு இவர்கள் உதவ வேண்டும். இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் பிரித்விஷா கேப்டனாக இருந்தபோது ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பணி செய்திருக்கிறார்.

பிரித்வி ஷாவை பற்றி ராகுல் டிராவிட்டிற்கு தெரியும். பிரித்விஷா தெரிந்தோ, தெரியாமலோ ஒரு தவறு செய்துவிட்டார். அவரை நல்ல வழியில் கொண்டு வருவதுதான் சிறந்த முடிவாக இருக்கும். ஒதுக்கி வைப்பது சுலபமான முடிவு. அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். பிரித்விஷா விஷயத்தில் அப்படி சுலபமான முடிவு எடுப்பது தவறு. பிரித்விஷா ஒருவேளை மீண்டும் அதே தவறை செய்தால், வாழ்நாள் தடை கூட விதிக்கலாம். ஆனால், எனக்கே தெரியாமல் அந்த தவறு நடந்துவிட்டது எனக் கூறி, மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதன்பிறகும் அவரை ஒதுக்கிவைப்பது சரியல்ல. ஒருமுறை செய்த தவறுக்காக அவரை ஒதுக்குவது நியாயம் கிடையாது. டிராவிட் அவருடன் பேச வேண்டும். அணி நிர்வாகத்திடமும் அவருக்காக டிராவிட் பேச வேண்டும்” என்றார்.

Tags : Prithvisha ,Gambhir , It is not fair to set aside for a mistake; Give Prithvisha a chance! Gambhir says
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...