×

அதிர்ஷ்டம் கைகொடுத்தால் அக்தரின் சாதனையை தகர்க்கலாம்: உம்ரான் மாலிக் உறுதி

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி அசத்தியவர் பாகிஸ்தான் வீரர் சோயப்அக்தர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்ட இவர் 2003ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிக் நைட்டுக்கு எதிராக 161.3 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சர்வதேச கிரிக்கெட்டின் அதிவேக பந்து ஆகும். அந்த சாதனையை இன்னும் எந்த பவுலரும் முறியடிக்கவில்லை. ந்திய அணியிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வந்திருந்தாலும், அக்தர் மாதிரியான மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இருந்ததில்லை.

ஆனால் தற்போது இந்திய அணியில் 150 கி.மீ. வேகத்திற்கு மேல் பந்துவீசக்கூடியவராக உம்ரான்மாலிக் விளங்குகிறார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் 150 கிமீ வேகத்திற்கு வீசுகிறார். உம்ரானை டி20 உலக கோப்பையில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான வலைப்பயிற்சியில் 163.7 கிமீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார். அதே பந்தை ஐபிஎல் போட்டியில் வீசியிருந்தால் அது வரலாற்று சாதனையாக இருந்திருக்கும்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள உம்ரான் மாலிக்கிடம், அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து கேட்டபோது, ``இப்போதைக்கு இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் இருக்கிறது. நான் நன்றாக வீசி, அதிர்ஷ்டமும் கைகொடுத்தால், அக்தரின் சாதனையை தகர்க்கலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. போட்டியில் பந்துவீசும்போது நாம் எவ்வளவு வேகத்தில் வீசுகிறோம் என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆட்டம் முடிந்தபின் தான் அதுகுறித்து நமக்கு தெரியவரும். களத்தில் பந்துவீசும்போது எனது முழுக்கவனமும் சரியான ஏரியாவில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தவேண்டும் என்பதில் மட்டுமே’’ என்றார்.

Tags : Akhtar ,Umran Malik , Luck can break Akhtar's record: Umran Malik is sure
× RELATED 55 மாணவர்கள் மாயமான வழக்கு பாக். பிரதமருக்கு கோர்ட் சம்மன்