×

அமெரிக்க குடியுரிமை கோரி கோத்தபய மனு

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கையில்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கோத்தபய ராஜபக்சே கடந்த  ஆண்டு ஜூலை மாதம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையை விட்டு  வௌியேறி ஒருசில வௌிநாடுகளில் தஞ்சமடைந்த கோத்தபய மீண்டும் இலங்கைக்கு  திரும்பினார். உலகின் பிற நாடுகள் அவருக்கு புகலிடம் தர மறுத்து விட்டன.  
இந்நிலையில் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை பெற மீண்டும் விண்ணப்பித்து  உள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி அவரது வழக்கறிஞர்கள் மூலம்  அளிக்கப்பட்ட விண்ணப்பம் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி  இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால்  கடந்த 2019ல் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபய  ராஜபக்சே, தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தார்.

Tags : Gotabaya ,US , Gotabaya's petition for US citizenship
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...