×

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி; நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் கோரிக்கை

சென்னை: பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் ஏற்கனவே திட்டமிட்டு அதற்கான ஆயத்தப்பணிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக, பொங்கல் பண்டிக்கைக்கு பின்னர், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என தொடர் விடுமுறை அளிக்கப்படுவதால் இந்தாண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் 12ம் தேதி சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.  

இந்நிலையில் சிலர், பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல ஆம்னி பேருந்தில் செல்வதற்காக ஆன்லைனில் பஸ் நிறுவனத்தின் வெப்சைட்டை பார்த்தபோது, பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், வழக்கமான ஆம்னி கட்டணத்தைவிட 3 மடங்கு அதிகம் என்பதே காரணம். அதன்படி, சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.1,000 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,500  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சி செல்ல ரூ.700 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.4,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வர இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் தற்போதே 3 மடங்கிற்கு கட்டணம் ஆம்னி பேருந்துகளில் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொது மக்களை அதி்ர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Tags : Omni bus ,Pongal festival , Omni bus fare hiked 3 times on Pongal festival: Passengers shocked; Officials request to take action
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா