மதத்தின் பெயரால் பாஜ மக்களை பிளவுபடுத்துகிறது: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு ஜனவரி 1ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், கட்சி தலைவர்கள், தொண்டர்கள் இடையே பேசிய மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, “நம் கட்சியின் சித்தாந்தம் அனைத்து மக்களையும் உள்ளடக்கியது. அனைவரையும் ஒற்றுமையுடன் நடத்துவது. ஆனால், காவி கட்சியான பாஜவின் சித்தாந்தம் மதத்தின் பெயரால் அனைத்து மக்களையும் பிளவுபடுத்துவது” என்று குற்றம்சாட்டினார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜவுக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் இடையே மறைமுக கூட்டணி இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இதனிடையே, மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ‘திதிர் சுரக்ஷா கவாச்’ என்ற பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது.

Related Stories: