×

ஆங்கில புத்தாண்டையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ரூ.70 லட்சம் நலத்திட்ட உதவிகள்: பங்காரு அடிகளார் வழங்கினார்

மதுராந்தகம்: ஆங்கில புத்தாண்டையொட்டி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆங்கில புத்தாண்டு கர்நாடக பக்தர்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோன்று, கடந்த 31ம் தேதி விடியற்காலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.  முதலில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அன்று மாலை 4.30 மணி அளவில் உலக நன்மை வேண்டியும், இயற்கை வளம் செழிக்கவும் சித்தர் பீடம் வளாகத்தில் கலச விளக்கு, வேள்வி பூஜை நடைபெற்றது. அந்த  பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் தேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, இரவு 12 மணியளவில் ஆங்கில புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக மங்கள இசை வாசிக்கப்பட்டு பக்தர்களின் கர ஒலியுடன் புத்தாண்டை வரவேற்று ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி, சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 9 மணி அளவில் சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை கர்நாடக மாநில ஆன்மிக இயக்க  பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். இந்த புத்தாண்டையொட்டி ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி மண்டபத்தில் நடைபெற்றது.

ஆன்மிக குரு பங்காரு அடிகளார், 9 நபர்களுக்கு மடிக்கணினி, 18 நபர்களுக்கு தையல்இயந்திரம், 18 நபர்களுக்கு அறுவை சிகிச்சை இயந்திரங்கள், 3 நபர்களுக்கு ஆட்டோக்கள், மருத்துவமனைகளுக்கு நன்கொடைகள், சிறப்பு குழந்தைகளுக்கான அன்னை இல்லத்திற்கு ₹5 லட்சம்  நிதி உதவி உள்ளிட்ட ₹70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணை தலைவர் தேவி ரமேஷ், வழக்கறிஞர் அ.அ.அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை   கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags : English New ,Atiparashakti Siddar Faculty , Rs 70 lakh welfare assistance to Adiparashakti Siddhar Peedam on the occasion of English New Year: Bangaru Adikalar
× RELATED 2023-ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை...