×

பண்ருட்டியை சேர்ந்த விவசாயியை தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

பண்ருட்டி: பண்ருட்டியை சேர்ந்த விவசாயியை தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அருகே உள்ள மேற்குமங்களம் சோந்த கிராமத்தில் இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த குமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருக்கும்போது 10 வருடங்களாக உதவியாளராக இருந்தார்,  உதவியாளராக இருக்கும்போது முன்னாள் அமைச்சர் சம்பத்திற்கும் குமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

மேலும் அவரிடம் சொத்து விவரங்களும், போன்றவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு இருந்தார், கடந்த வருடம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உதவியாளர் அவர்கள் முன்னாள் அமைச்சர் சம்பத்திடம் இருந்து வேலையை விட்டு வெளியேரி உள்ளார். கடந்த ஒரு 3 வருடங்களுக்கு மேலாக அவர் முன்னாள் அமைச்சர் சம்பத்திடம் வேலைக்கு செல்லவில்லை, இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வேலைக்கு வருமாறு என்று சம்பத் கூறியிருக்கிறார். ஆனால் குமார் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், மேற்குமங்களம் கிராமத்தில் குமாரினுடைய மாமியார், மாமனார் அவர்கள் இருந்துள்ளனர்.

இன்று காலை திடீர் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அண்ணன் எம்.சி.தங்கமணி மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் ராஜேந்திரன், பழனி, உட்பட 10 பேர் குமாரின் மாமனார், மாமியார் வீடிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர்கள் மாமியார், மாமனார் இருக்கும் போது அவர்களை தாக்கி அவரையும் அவருடைய மனைவியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். உதவியாளர் குமார் உடனடியாக வரவேண்டும், அதற்கு குமார் மறுப்பு தெரிவித்தால் உங்களை கொலை செய்து விடுவோம் என்றும் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து ஊர் மக்கள் அனைவரும் சென்று அவர்களை விலக்கி விட்டுருக்கிறார்கள், அதன்பிறகு மக்கள் அனைவரும் மாமியார் மற்றும் மாமனார் ராமசந்திரன், ஜோதி அவர்களை சிகிச்சைக்காக அவர்களை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து ராமச்சந்திரன் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அவருடைய அண்ணன் எம்.சி.தங்கமணி ராஜேந்திரன், பழனி உட்பட 10 பேர்கள் என்னை தாக்க முயன்றனர் என்று கூறி புகார் அளித்திருந்தார்.

அதன் பெயரில் பண்ருட்டி காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும் அவருடைய அண்ணன் என்,சி.தங்கமணி மற்றும் ராஜேந்திரன் பழனி உட்பட 14 பேர் மீது தற்போது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை தெரிந்த உதவியாளர், வேறு வேலைக்காக செல்வதை அறிந்து அவர் மீது கடுமையாக கோவப்பட்டு உதவியாளரின் மாமியார் மற்றும் மாமனாரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாமியார் மாமனார் தாக்கிய சம்பவம் பண்ருட்டி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.        


Tags : -Minister ,M. Kruti ,Pannruti ,Sambat Intours , Case registered against AIADMK former minister MC Sampath and others in the complaint of assaulting a farmer from Panruti
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி