×

மலையாள நடிகை பிரவீனா அவரது குடும்பத்திற்கு எதிராக தமிழக இளைஞர் சைபர் தாக்குதல் நடத்துவதாக புகார்

கேரளா: மலையாள நடிகை பிரவீனா அவரது குடும்பத்திற்கு எதிராக தமிழக இளைஞர் சைபர் தாக்குதல் நடத்துவதாக புகார் அளித்துள்ளார். மலையாள நடிகை புகைப்படங்களை மார்பிங் செய்து வலைத்தளங்களில் பரப்பியதாக அவர் ஏற்கனவே புகார் அளித்தார், அது தொடர்பாக திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்நாட்டை சேர்ந்த 23 வயது இளைஞர் பாக்கியராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார், இந்த நிலையில் அதே நபர் மீண்டும் தமக்கும், தமது மகளுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எதிராக சைபர் தாக்குதலில் ஈடுபடுவதாக நடிகை பிரவீனா குற்றம் சாட்டியுள்ளார். ஜாமினில் வெளியே வந்துள்ள பாக்கியராஜ் தமது மகளை குறிவைத்து சைபர் தாக்குதலில் ஈடுபடுவதை குறித்து, தமது நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக நடிகர் பிரவீனா தெரிவித்துள்ளார்.

தமது புகைப்படத்தை மார்பிங் செய்து பரப்பிய அவர், மகள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் போலி கணக்கு துவங்கி இதுபோல செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிருக்கிறார். இது தொடர்பாக கேரளா காவல்துறை சைபர் கிரைம் பிரிவில் தமது மகள் 4 புகார்கள் அளித்துள்ளதாகவும், அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரவீனா வேதனை தெரிவித்துருக்கிறார்.

அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரின் புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரவீனா 1992ம் அண்டு மலையாளத்தில் வெளியான கௌரி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கலி ஊஞ்சல் படத்தின் மூலம் ஹீரோயினாக வெளியான அவர் மலையாள படங்களின் முக்கிய கதாபாத்தியாம் நடித்துள்ளார்.
 

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார், தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி, டெடி, லாபம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார், தமிழ் மற்றும் மலையாளம் சீரியல்களில் அம்மா கதாபாத்திரங்களிலும் பிரவீனா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  




Tags : Praveena ,Tamil Nadu , Malayalam actress Praveena complains that Tamil Nadu youths are cyber attacking her family
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...