×

அணு ஆயுதங்களும், ஏவுகணைகளையும் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும்: வடகொரிய அதிபர் கிங் ஜாங் அழைப்பு

பியோங்கியங்: அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், அணு ஆயுதங்களும் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிங் ஜாங் அழைப்பு விடுத்துள்ளார். ஆளும் உழைப்பாளர் கட்சிக்கு பல ராக்கெட் லாஞ்சர்களை வழங்கும் நிகழ்ச்சியில் வடகொரியா அதிபர் கிங் ஜாங் கலந்து கொண்டு பேசினார்.

வடகொரியாவை தனிமைப்படுத்தி ஒடுக்க அமெரிக்காவும் அண்டை நாடான தென்கொரியாவும் முயற்சிப்பதாகவும் என்றும் இல்லாத அளவுக்கு தென்கொரியாவில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் குவிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டின் அணு சக்தியை வலுப்படுத்தவும் எதிரி நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்கவும் கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், அணுசக்தி ஆயுதங்களும் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும் கிங் ஜாங்கூறினார்.

நாட்டின் இறையாண்மையையும், பாதிக்கப்பையும் உறுதிப்படுத்தவும் கட்டி காக்கவும் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கடந்த வாரம் வடகொரியாவின் டிரோன் ஏவுகணைகள் தென்கொரிய வான் பகுதியில் ஊடுருவியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் வடகொரியா அதிபர் இவ்வாறு கூறியிருப்பது கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளையும், 3 நாசகார ஏவுகணைகளையும் செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.         



Tags : Korean ,President ,King Jong Un , Nuclear, Weapon, Missile, North Korea, President, King Jong, Call
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...