×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சருக்கு நேரில் நன்றி

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இதனால் அரசுக்கு 2,359 கோடி ரூபாய் கூடுதல் செலவீனம் ஏற்படும் என்றாலும் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ், இந்த சந்திப்பின் போது பழைய பென்ஷனை வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். ஜனவரி 5ம் தேதி போராட்டம் நடத்துவது குறித்து சக ஒருங்கிணைப்பாளர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறினார்.


Tags : Jacto Jio ,Chief Minister , Govt employees, cheap, Jacto Jio organization
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...