2022ல் 38 லட்சம் கார்கள் விற்று சாதனை!: 5.5 லட்சம் ஹூண்டாய் கார்கள் விற்பனை.. டாடா மோட்டார்ஸ் விற்பனை 58% உயர்வு..!!

டெல்லி: இந்தியாவில் கார் விற்பனையில் 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனம், 2022ல் 5,52,511 கார்களை விற்பனை செய்துள்ளது.

* 2021ல் 5,05,033ஆக இருந்த ஹூண்டாய் கார்களின் விற்பனை, 2022ல் 9.4 சதவீதம் உயர்ந்து 5,52,511 ஆக அதிகரித்துள்ளது.

* எஸ்.யு.வி.மாடல் கார்களில் கவனம் செலுத்தி வரும் கியா இந்தியா நிறுவன கார்களின் விற்பனை 2022ல் 40.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

* 2021ல் 1,81,583 ஆக இருந்த கியா கார்களின் விற்பனை 2022ல் 2,54,556 ஆக உயர்ந்துள்ளது.

* 2021ல் 1,30,768 ஆக இருந்த டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் கார்களின் விற்பனை 2022ல் 1,60,357 ஆக அதிகரித்துள்ளது.

* ஹூண்டா கார்களின் விற்பனை 89,152ல் இருந்து 95,022 ஆகவும் ஸ்கோடா கார்களின் விற்பனை 23,853ல் இருந்து 53,271 ஆகவும் விற்பனையானது.

டாடா மோட்டார்ஸ் விற்பனை 58 சதவீதம் உயர்வு:

இந்திய வாகன தயாரிப்பாளர்களிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை 2021ஐ விட 2022ல் 58.2 சதவீதம் உயர்ந்துள்ளது. 2021ல் 3,32,190 ஆக இருந்த டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை 2022ல் 5,26,798 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே விற்பனையில் முதல் இடத்தில் உள்ள மாருதி சுசூகி கார்களின் விற்பனை 2022ல் 15.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ல் 13,68,393 ஆக இருந்த மாருதி கார்களின் விற்பனை 2022ல் 15,79,562 ஆக அதிகரித்துள்ளதாக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

2022ல் 38 லட்சம் கார்கள் விற்று சாதனை:

இந்தியாவில் 2022ல் 37 லட்சத்து 93 ஆயிரம் கார்கள் விற்பனையாகி வாகனத்துறையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2018ல் சாதனையான 33.8 லட்சம் கார்கள் என்ற எண்ணிக்கையும் 2022ம் ஆண்டின் கார் விற்பனை விஞ்சிவிட்டது. 2021ல் மொத்தம் விற்பனையான 30.8 லட்சம் கார்களுடன் ஒப்பிட்டால் 2022ல் கார் விற்பனை 23.1 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ல் செமி கண்டக்டர் தட்டுப்பாட்டால் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்ததால் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டது. செமி கண்டக்டர் சப்ளை 2022ல் சீரானதால் கார்களின் உற்பத்தியும் விற்பனையும் முந்தைய ஆண்டை விட கணிசமாக உயர்ந்துள்ளது.

Related Stories: