×

புதுக்கோட்டை மருத்துவ மாணவர் சீனாவில் உயிரிழப்பு: சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் உதவுமாறு பெற்றோர் கோரிக்கை

புதுக்கோட்டை: மருத்துவ பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டை மாணவர் உடல்நல குறைவால் அங்கேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றிய மாநில அரசுகள் உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் சீனாவில் உள்ள க்யூக்கார் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து தேர்ச்சி பெற்று விட்டார். படிப்பின் ஒரு பகுதியான பயிற்சிக்காக கடந்த 11-ம் தேதி மீண்டும் சீனா சென்றுள்ளார்.

அங்கு திடீரென ஷேக் அப்துல்லாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக நிர்வாகம் மூலம் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்கான மருத்துவ செலவை அனுப்பி வைக்குமாறும் அங்கிருந்து கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவரின் தந்தை சையத் அபுல் ஹாசன் தனது உறவினர்களிடம் கடன் வாங்கி ரூ.6,40,000 அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக சீன பல்கலை கழக நிர்வாக தரப்பில் அவர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் துயரில் ஆழ்ந்துள்ளனர். கூலி வேலை பார்த்தும், கடன் வாங்கியும் ஷேக் அப்துல்லவின் பெற்றோர்கள் அவரை சீனாவில் மருத்துவம் படிக்க வைத்த நிலையில் தற்போது இறந்த மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முடியாமல் அவரது பெற்றோர் தவிக்கும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.    


Tags : Pudukkotta ,China ,Union , Pudukottai, Medical, Student, China, Casualty, Union, State, Government, Parent, Request
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...