கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் சிறப்பு வார்டுகள் தயார்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் வசதியுடன் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது. கொரானா தொற்று பரவல் பல்வேறு நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் சூழலை எதிர்கொள்ள, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில், கொரோனா சிகிச்சைக்கென 200 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 100 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கும், 100 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொண்டதாகவும் உள்ளது. அத்துடன் சிறப்பு தீவிர சிகிச்சைக்காக 15 படுக்கைகளும், 15 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,580 ஆர்டிபிசிஆர் யூனிட்கள் கொரோனா சோதனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளில் அதிகபட்சமாக 950 நபர்களுக்கு சோதனை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 150 டாக்டர்கள், 160 செவிலியர்கள், 40 துணை மருத்துவர்கள், 2 ஆயுஷ் மருத்துவர்கள், வெண்டிலேட்டர் பயிற்சி ஊழியர்கள் 160 பேர் என தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றுவோரின் தேவைக்காக 2400 பாதுகாப்பு கவச உடைகள், 12,100 முககவசங்கள் இருப்பில் உள்ளது. 115 ஆக்சிஜன் செறியூட்டிகள், 101 டி-டைப் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 84 பி-டைப் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், காற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்கள் 5 என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைள் ஒத்திகையை, அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் நடத்த வேண்டும் என ஆணையிட்டார்.

இதையடுத்து கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொ) டாக்டர் சங்கீதா தலைமையில், கொரோனா சிகிச்சை பிரிவுத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் டாக்டர் சசிகுமார், டாக்டர் இளங்கோ, டாக்டர் நந்தபிரபு ஆகியோர் முன்னிலையில் ஒத்திகை பணிகள் சரிபார்க்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கீதா கூறியதாவது: இந்த புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.

குறிப்பாக காற்றில் உள்ள 21 சதவீத ஆக்சிஜனை, ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி மூலம் 93 சதவீதமாக மாற்றவும், ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி மூலம் 100 படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்க தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், திரவ ஆக்சிஜன் கொள்கலன் நிசான் கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட 10 கிலோ லிட்டரும், கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 13 கிலோ லிட்டர் கொள்கலன்கள் பயன்பாட்டில் உள்ளது.

இவற்றை முறையாக பயன்படுத்த பயிற்சி பெற்ற 150 டாக்டர்கள், 160 செவிலியர்கள், 40 தொழில்நுட்ப பணியாளர்கள், சித்தா மற்றும் இயற்கை யோகா மருத்துவர்கள் 2 பேர், 3 துணை செவிலியர்கள், போதுமான மருத்துவமனை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில், கொரோனா சிகிச்சைக்கென 200 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 100 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கும், 100 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொண்டதாகவும் உள்ளது. அத்துடன் சிறப்பு தீவிர சிகிச்சைக்காக 15 படுக்கைகளும், 15 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,580 ஆர்டிபிசிஆர் யூனிட்கள் கொரோனா சோதனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: