நாமக்கல்லில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத நிலை : குளிருடன் பனிமூட்டம் நிலவியதால் மக்கள் தவிப்பு..!!

நாமக்கல்: மார்கழி மாதம் தொடங்கியது முதல் தமிழகத்தில் அதிகாலை நேரம் முதல் கடும் குளிர் வாட்டிவதைக்கிறது. நாமக்கல் விராலிமலையில் அதிகாலை நிலவிய பனி மூட்டத்தால் எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது. டிசம்பர் மாதம் தொடங்கிய முதலே பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தும் இரவில் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது. நீர்நிலைகள் நிறைந்த பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக எதிராய் வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் சாலைகளில் மூடுபனி சூழ்ந்தது.

விராலிமலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால் நடைப்பயிற்சி செல்வோர் வீடுகளில் முடங்கினார்கள். விராலிமலை மணப்பாறை சாலை, விராலிமலை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதே போல் நாமக்கல் நகர பகுதி முழுவதும் நிலவிய பனிமூட்டம் காரணமாக எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அத்தியாவசிய பணிக்கு செல்வோர் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.

Related Stories: