×

காஷ்மீரில் தொடர் பதற்றம்: 4 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் குண்டுவெடிப்பு..!

ரஜோரி: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சித்ரா பகுதியில் டிச.28ல் என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அப்பர் டாங்ரி என்ற கிராமத்திற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீதும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் 4 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கல் சம்பவத்தால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தகப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து டாங்கிரியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் தவறி விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். துணைநிலை ஆளுநர் மனோஜ் ஆளுநர் சின்ஹா நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை கேட்கவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ரஜோரி அருகே மேல் டாங்கிரி பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags : Kashmir , Continued tension in Kashmir: 4 civilians were shot dead in a blast..!
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...