வங்கி மேலாளர் தற்கொலை மனித உரிமை ஆணையம் நெல்லை எஸ்.பிக்கு நோட்டீஸ்: 4 வாரத்தில் அறிக்கை தர உத்தரவு

நெல்லை: நெல்லை அருகே மூலைக்கரைப்பட்டியில்   வங்கி கிளை மேலாளர் தற்கொலை செய்த வழக்கில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட எஸ்பி சரவணனுக்கு மனித உரிமை   ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நெல்லை  மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில்  உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி  வந்தவர் முருகேசன். வங்கி நிர்வாகம், அவரை  கோவில்பட்டிக்கு பணியிட  மாற்றம் செய்தது.

முருகேசன், தனது மகள்  படிப்புக்காக மூலைக்கரைப்பட்டி கிளையில் மேலும் ஓராண்டு பணி நீடிப்பு  வழங்குமாறு  கேட்டுள்ளார். ஆனால் நிர்வாகம், முருகேசனை ராமநாதபுரம்  மாவட்டம்,  முதுகுளத்தூர் கிளைக்கு மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.  இதனால்  மனமுடைந்த  முருகேசன், கடந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி தற்கொலை செய்து   ெகாண்டார்.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் இளங்கோ, மனித உரிமை   ஆணையத்தில் புகார் அளித்தார். மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், வங்கி கிளை மேலாளர்   முருகேசன் தற்கொலை தொடர்பாக 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல்   செய்யுமாறு நெல்லை எஸ்.பி. சரவணனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories: