எதிர்க்கட்சிகளும் சேர்ந்தால்தான் பாஜவை வீழ்த்த முடியும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால்தான் பாஜவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:

மதிமுகவில் அடுத்த 3 மாதங்களில் அமைப்பு தேர்தல் நடக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. துரை வைகோ தயாரித்த மாமனிதன் வைகோ ஆவணப்படம் தமிழகத்தில் 46 இடங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மதிமுக அமைதியாக இருக்கவில்லை. அமைதியாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. வருகிற 25ம் தேதிக்கு பிறகு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த இருக்கிறோம்.

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பாஜவை வீழ்த்த முடியும். அவர்கள் எண்ணிக்கை அளவில் அதிகமாகிவிட்டனர். மீண்டும் அதேபோன்று வெற்றி பெற நினைக்கின்றனர். எனவே, பாஜ அல்லாத அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால்தான் அவர்களை வெற்றி பெற முடியும்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எங்கள் கூட்டணி நல்ல வலுவாக இருக்கிறது. சரியாகவும் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: