×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட தயங்காது: எடப்பாடிக்கு அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தனித்து களம் காண தயங்காது என அண்ணாமலை கூறியுள்ளார். இது புத்தாண்டு தினத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்   எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக விடுத்துள்ள எச்சரிக்கையாகவே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்காமல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று ஜெயிக்க முடியாத சூழல் உள்ளது.

எனவே, தமிழகத்தில் திராவிட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைக்க தொடர்ந்து பல்வேறு உபயங்களை பயன்படுத்தியும், ஏஜென்சிகளை வைத்து பயமுறுத்தி பணிய வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் அதிமுக ஜெயிக்க வாய்ப்புள்ள ெதாகுதிகளில் தாங்கள் ஜெயிக்கலாம் என்று நினைத்து பூத் ஏஜென்ட் அமைப்பது, தேசிய தலைவர்களை அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்துவது போன்றவற்றில் இறங்கி உள்ளது.

 ஆனால், பாஜ தமிழகத்தில் வளர்ந்துவிட்டதாக நினைக்கிறது. ஆனால், சட்டசபை தேர்தலில் அவர்கள் பெற்ற வெற்றி  அதிமுகவுக்கு கிடைக்க வேண்டியது. ஆனால், தொகுதிகள் பாஜவுக்கு தாரை வார்க்கப்பட்டதால், பாஜவின் வெற்றி எண்ணிக்கை அதிமுகவில் சேரவில்லை. ஒன்றிய அளவில் ஆளும்கட்சியாக இருப்பதால் மட்டுமே பாஜ தமிழகத்தில் பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர, அவர்களுக்கான பலத்தை வைத்து அல்ல. மேலும் தேர்தல் வெற்றிக்காக பாஜ எதை செய்வதற்கும் தயாராக உள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் இதற்கான பதிலை திமுகவிற்கு வழங்குவேன் என பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் டிவிட்டர் வயிலாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   பாஜ கடந்த காலங்களில்  தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத்  தயங்காது. நீங்களும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க தயாரா என குறிப்பிட்டுள்ளார்.

பாஜ தலைவர் அண்ணாமலையின் இந்த சவால் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக இருந்தாலும், அரசியல் விமர்சகர்களிடையே, அதிமுக இணங்கி வராவிட்டால் பாஜ தனித்து போட்டியிடவும் தயங்காது என்று மறைமுகமாக எடப்பாடி பழனிசாமிக்கு தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கையின் உள் அர்த்தம் அதுதான். ஆளுங்கட்சிக்கு எதிரான அறிக்கை என்று யாராவது நினைத்தால் அது அறியாமையாகவே இருக்கும் என்கின்றனர்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்:
அதிமுக வழக்கில் ஒருவேளை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தால் தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என இரு தரப்புமே நம்புகிறது. இதில் பாஜவின் தலைமையின் ஆதரவு நோக்கி இரு தரப்பும் காத்திருக்கொண்டிருக்கின்றனர்.  ஏற்கனவே, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த கூட்டணி  நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜ தனித்து களம் கண்டன. இதில் பாஜ கணிசமான வாக்குகளை பெற்றிருந்தன. இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், எடப்பாடி, ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் இணைய வேண்டும் என்று பாஜ தலைமை வற்புறுத்தி வருகிறது. இதை ஏற்க  மறுத்து எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடித்து வருகிறார். அண்மையில் நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனித்து நின்று குறிப்பிடத்தகுந்த வெற்றியை அதிமுகவால் பெற முடியும் என்று நேரடியாகவே பாஜவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது அவருக்கு அண்ணாமலை மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Baja ,Anamalai ,Edapadi , Parliamentary elections, BJP's solo contest, Edappadi
× RELATED நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக...