×

குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நினைவு பிரார்த்தனை கூட்டம்

மேஹ்சனா: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்(வயது 99) அகமதாபாதில் கடந்த வௌ்ளிக்கிழமை  காலமானார். அவரது மறைவுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், வௌிநாடுகளை சேர்ந்த தலைவர்கள், விளையாட்டு துறையினர் இரங்கல் தெரிவித்தனர். ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குஜராத்தின் வர்த் நகர் பகுதியில் உள்ள வணிகர்கள் தாங்களாகவே கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

இந்நிலையில், வர்த் நகர் பகுதியில் ஹீராபென் நினைவாக பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில், குஜராத் சட்டமன்ற சபாநாயகர் சங்கர் சவுத்ரி, ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல், பாஜ தலைவர் சஞ்சய் ஜோஷி, முன்னாள் சபாநாயகர் நிமா ஆச்சார்யா, எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : PM Modi ,Heeraben ,prayer meeting ,Gujarat , Gujarat, PM Modi's mother, Heeraben memorial prayer,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...